Wednesday, March 6, 2013

நவம்பர் 2012


சிந்திக்க வேண்டுகிறேன்!

அன்புத்தோழர்களே!
இந்தியாவைக் கண்டுபிடிக்கக் கிளம்பிய கிரிஸ்டோபர் கொலம்பஸ், மேற்கிந்தியத் தீவுகளையும், இன்றைய அமெரிக்கா எனும் புதிய உலகையும் கண்டுபிடித்தார். அவர் தொடங்கி வைத்த உலகமயமாக்கப்பட்ட வர்த்தகம், பசிபிக் பெருங்கடலைத்தாண்டி, ரோப்பிய நாடுகளின் ஏகாதிபத்தியத்தை உலகம் முழுவதும் நிலை நாட்டியது. அமெரிக்கா எனும் பெருங்கனவு காணும் நாடு உருவானது.

அ.நாராயணன்
துப்பாக்கிகளின் க்திக்கும், பீரங்கிகளின் எண்ணிக் கைக்கும் ஏற்ற வகையில், ஆக்கிரமிக்கப்பட்ட நாடுகளின் வளங்கள் எல்லாம் வர்த்தகத்திற்கு ஆளாகின. முதல் உலகப் போரும், இரண்டாம் உலகப் போரும் மூண்டன. பெட்ரோலியக் கண்டுபிடிப்பு அப்போர்களுக்குத் தீயை மூட்டியது.

இரண்டாம் உலகப் போர், உலகின் எல்லா நாடுகளிலும் மனித அழிவை மட்டுமல்ல, அறிவியலை, தொழில் நுட்பத்தை அதன் விளைவாக உற்பத்தியை, பொருளாதார வளர்ச்சியை வரலாறு காணாத வகையில் கொண்டு வந்தது.

நாடுகளுக்கும், தனிமனிதர்களுக்கும் எண்ணற்ற வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தது. பாலைவனங்களில் ஓட்டகம் ஓட்டிக் கொண்டிருந்தவர்கள், எண்ணெய் வளங்களினால், பொருளாதார க்திமான்கள் ஆனார்கள்.

புதிய உலகம், புதிய வாய்ப்புகள், அதிக வளர்ச்சி, அதிக எண்ணிக்கை, அதிக உற்பத்தி, அதிக பொருட்கள், எல்லையில்லாத நுகர்வு, பெரிதாக நுகர்வு. நாளை இல்லை என்று நினைத்துக் கொண்டு, இன்றே நுகர்ந்துவிடு. இதுதான் தாரக மந்திரமானது.

அமெரிக்கா, முதலாளித்துவ சித்தாந்தம் தொடங்கி வைத்த இந்த எல்லையில்லாத வாய்ப்புகள், எல்லையில்லாத உற்பத்தி, எல்லையில்லாத நுகர்வு எனும் கருத்தாக்கம், உலகம் முழுவதும் உள்ள நாடுகளை ஒரு சுனாமியைப் போல் தாக்கியது.

உலக வங்கி (WB), பன்னாட்டு நிதியம் (IMF) ஆகியவை, இப்படிப்பட்ட பொருளாதாரச் செயல்பாட்டினை அளப்பதற்கு ஜிடிபி (GDB) என்ற தாரக மந்திரத்தை உலக நாடுகளுக்கு கற்றுக் கொடுத்தன. GDB இது உலக நாடுகள், குறிப்பாக வளர்ச்சியடைந்ததாகக் கூறப்படுகிற நாடுகள் ஓயாது முணுமுணுக்கும் மந்திரமானது. உலக நாடுகளின் ஆட்சியாளர்களிடம் அதிக ஜிடிபி என்பதை ஒரு கொள்கை வெறியாக மாற்றியது. அதிக ஜிடிபி என்ற சித்தாந்தம் இருக்கலாம், கொள்கை இருக்கலாம், நம்பிக்கை இருக்கலாம். ஆனால், அவை சித்தாந்த வெறியாக, கொள்கை வெறியாக மாறுவது ஆபத்தானது.

மதப்பற்று பயங்கரவாதமாக மாறுவது போன்று, GDB என்பதே பொருளாதார பயங்கர வாதமாக மாறிய ஆபத்து உலகில் தோன்றியது. GDB-யை அதிகரித்து, வல்லரநாடாக வேண்டு மானால், பொருளாதார உலகமயம், தனியார்மயம், கட்டுப்பாடில்லாத தாராளமயம் இவைதான் வழி என்றனர், பொருளாதார குருமார்கள். இந்த குருமார்களின் மடம்தான், (WTO) உலக வர்த்தக நிறுவனம். MBA கல்வி மூலம் முதலாளித்துவ சிஷ்யகோடிகளை உருவாக்க பொருளாதார மேலாண்மைப் பள்ளிகள் நிறுவப்பட்டன.

தனிமனிதன் அளவற்ற பேராசை கொண்டால், நாட்டின் GDB-யை வளர்க்கலாம் என்றார்கள். இதன்பொருட்டு, உலக நாடுகளின் குடிமக்களை, விற்பவர்களாகவும், நுகர்பவர்களாகவும் மற்றியமைத்து, புதிய ந்தைப் பொருளாதார மூகத்தை ஏற்படுத்திவிட்டனர்.

நுகர்வுக் கலாச்சாரம் எனும் ஒருவழிப் பாதைக்குள் உலக முதாயம் நுழைய வேண்டு மென்றால், உலக நாடுகளின் இனங்களின் கலாச்சாரமும், மொழி அழிய வேண்டும். திட்டமிட்டு இந்த கலாச்சா, நாகரீக அழிவு மேற்கொள்ளப்பட்டது. வெற்றிகரமாக இது தொடர்கிறது. இப்படியாக, வீடுகளை, கல்விக் கூடங்களை, மருத்துவமனைகளை, ஏன் வழிபடும் கோயில்களைக் கூட ந்தைகளாக, சூப்பர் மார்க்கெட்களாக மாற்றி விட்டோம்.

இந்த எம்.பி.ஏ படித்த மந்திரவாதிகளின் பேச்சேக்கேட்டு, பொருளாதாரச் சுரண்டல் என்பது நாகரீகமாக, பிஸினெஸ் மேனேஜ்மென்ட் என்ற கவர்ச்சிகரமான ட்டையைப் போர்த்திக் கொண்டது.

வீடுகளை எல்லாம் ந்தை உற்பத்தி செய்யும் எல்லா வகையான பொருட்களும் அடைத்துக் கொண்டன. வாழ்வதற்காக நுகர்வு என்பது போய், நுகர்வதற்காக வாழ்க்கை என்று புதிய வாழ்வியல் இலக்கணம் தோன்றியது. வீடுகலே ந்தையைப் போல் காட்சிப்பதால், குடும்ப உறவுகள் சிதைந்து, எல்லோரும் ந்தைப் பிரதிநிதிகளாக இன்றைக்கு காட்சியளிக்கிறோம்.

இதில் எந்த ஒரு குடும்பமும் விதிவிலக்கல்ல. வீடு இரண்டுபட்டால், கூத்தாடிக்குக் கொண்டாட்டாம் என்பது பழைய மொழி. வீடுகள் இரண்டானால், விற்பனையாளர்களுக்கு கொண்டாட்டம். ந்தைப் பொருளாதாரத்திற்கு கொண்டாட்டம் முதலாளித்துவத்திற்கு கொண்டாட்டம்.

வீடுகள் மட்டுமல்ல, மனித உடலே பொருளாதாரச் ந்தையின் கூறுகளாகின. சிகப்பழகு முகப்பூச்சு முதல் கிட்னி வரை, செயற்கை கருத்தரிப்பு முதல் வாடகைத்தாய் வரை எல்லாமும் ந்தைப் பொருள்கள். தொப்புள் கொடியைக் கூட ந்தைப்படுத்தி விட்டார்கள். இவற்றிற்கான தேவைகளுக்கு ஏற்ப, இவற்றின் நிலை இறங்கும், ஏறும். தேவைக்கிடக்கையை ஏற்படுத்தியாகி விட்டது. வாங்கும் க்தி இல்லையா? கடன் கொடுக்கும் ந்தைகளுக்கான வாய்ப்புகளை உருவாக்கலாம்.

தனியார்மயத்தின் வெற்றி மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது த்திரமானால் என்ன நடக்கும்? மூகத்தின் வளங்கள், பகிர்ந்து அனுபவிக்க வேண்டிய பொது சொத்துக்கள், எல்லாமே தனியார்மயமானது. இயற்கை வழங்கும் கொடையான நீர் கூட தனியார் ந்தைப் பொருளானது.

தனிமனிதனின் பேராசைக்கு, இயற்கை வளங்கள் சூறையாயின. அன்றைய கிழக்கந்திய கம்பெனி போன்று, உலகில் நிறுவனங்களே கடல்தாண்டி எல்லா நாடுகளிலும் தங்களுக்கான ராஜியங்களை உருவாக்கின.

ஒருவொருக்கொருவர் உடல், மன ஆரோக்கியத்திற்காகவும் பரஸ்பரம் மகிழ்ச்சிக்காகவும் விளையாடும் விளையாட்டுகள் கூட இன்று விளையாட்டல்ல, சேயும் எம்பிஏக்கள் முன்னின்று நடத்தும் சீரியஸ் பிஸினஸ்சொல்லப் போனால், உலகில் வளர்ந்த நாடுகள் என்று எதுவும் இல்லை. ஏதோ ஒரு விதத்தில், மற்ற நாடுகளை, இயற்கை வளங்களை, மூகங்களை, சுரண்டி வளர்ந்த நாடுகள் தாம் அவை.

மத்துவம் என்பது உலக அகராதியில் கெட்டவார்த்தையாகி, அளவிலா பொருளாதாரச் சுதந்திரம் மட்டுமே உள்வாங்கப்பட்டுவிட்டது.

ஆனால், இந்த உற்பத்திப் பொருளாதாரம் என்பது ஒரு வழிப்பாதை என்பதை உலக நாடுகள் இப்பொழுது உணர்ந்தும், மாற்றுவழி கிடைக்காமல், திகைத்துக் கிடக்கின்றன. உலக மக்கள்அதுவும் ந்தைப் பொருளாதாரத்தின் வாடிக்கையாளர்களான நடுத்தர மக்கள் அதுவும் ருசிகண்ட பூனையாக, ந்தைப் பொருளாதாரத்தை விட முடியாமல் தவிக்கின்றனர்.

கோலாகலமாக, டாம்பீகமாக, 12 ஆண்டுகளுக்கு முன் ஒலிம்பிக்ஸ் போட்டிகளை கம்பீரமாக நடத்திய கீரீஸ் நாடு, இன்றைக்கு பொருளாதார அஸ்திவாரம் கெட்டு, தவியாய்த் தவிக்கிறது. ஐரோப்பிய நாடுகள் ஒருவொருக் கொருவர் பாரமாகத் தெரிகின்றனர். அமெரிக்கா, ஜப்பான், கொரியா எல்லாம் ந்தைப் பொருளாதாரம் தேங்கி விட்டதேமாற்று என்ன என விடைதேடி அலைகின்றன.

பல இனங்களை, மொழிகளை வர்க்க பேதங்களை, கணக்கில்லா வித்தியாங்களை, குறிப்பாக, இனம் சாதி அவற்றின் அடிப்படையில் மூகப் பொருளாதார அடுக்குகளை கட்டமைத்துக் கொண்டுள்ள நாடு இந்தியா இப்படிப்பட்ட இந்தியாவில், தனியார் மயம், தாராளமயம், ந்தைப் பொருளாதாரம் போன்றவை, வல்லவனுக்கு மட்டுமே கிடைக்கும் ஆயுதமானது.

தடியெடுத்தவன் தண்டல்காரன் என்பதை இன்றைக்கு நாம் நம் கண்முன்னே பார்த்து வருகிறோம். கல்வி என்பது கூட இனவிடுதலைக் கானது என்பதாக இல்லாமல், பொருளாதாரச் சுரண்டலுக்கு வழிவகுக்கும் அவலத்தைத் தான் கண்டு வருகிறோம்.

இடைவிடாது நுகர்வைத் தூண்டி, அதன் மூலம் ந்தையை விரிவுப்படுத்தி, உற்பத்தியைப் பெருக்கி, பொருளாதார வளர்ச்சியை அடைவது என்ற ஒரே கொள்கையைத்தான் இந்தியாவில், கடந்த 20 ஆண்டுகளாக அரசு முன்னெடுத்துச் சென்று, ஒட்டுமொத்த மூகமும் ஆட்டுமந்தைகளாக, அவ்வழியே போய்க் கொண்டிருக்கிறோம்.

இந்த உலகமயமாக்கம், தாராளமயம், தனியார் மயம், பொருளாதாரத்திற்கு நன்மையளித்துள்ளதா என்றால் அளித்துள்ளது. வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதா என்றால் உருவாக்கியுள்ளது.ஏழ்மையை குறைந்துள்ளதா? ஆமாம், ஓரளவு குறைந்துள்ளது.

திறமைக்கு வாய்ப்பளித்துள்ளதா?,மவாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளதா? இது தொடருமா?, ரியான திசையில் மக்களைக் கொண்டு செல்கிறதா?, இக்கேள்விகளுக்கு பதில் இல்லை.

நீண்ட கால விளைவுகளைப் பற்றி தெளிவாக சிந்திக்க முயலாமல் அல்லது அதற்கு அவகாம் இல்லாமல், உடனடித் தீர்வாக, இந்த ந்தைப் பொருளாதார வளர்ச்சியையே மத்திய மாநில அரசுகள் மீண்டும் மீண்டும் முன் வைக்கின்றன.

அதிக மக்கள் தொகையும் ஏழ்மையும் கொண்ட இந்தியாவிற்கு இந்தக் கொள்கைதான் உதவும் என்று உறுதியாக நம்புகின்றனர் ஆட்சியாளர்கள்.
சொல்லப் போனால் அரசுகள் கட்டுக்குள் இந்த ந்தைப் பொருளாதாரத்தின் பிடியில் இருந்து அரசுகளும் மக்களும் மீளமுடியவில்லை. இந்தப் பொருளாதார பயங்கரவாதம் இந்தியாவில், இப்பொழுது உக்கிரமடைந்து விட்டது.

எது வளர்ச்சி என்றும் வளர்ச்சியின் அடிப்படை நோக்கம் என்ன என்றும் கேள்விகள் கேட்டு விடைதேட யாருக்கும் நேரமில்லை. இந்த சிந்தனைக்கே இடமில்லாமல், இந்த GDB மந்திரமானது, ஒட்டுமொத்த மூகத்தையும் ந்தைப் பொருளாதார அடிமைகளாக்கிக் கொண்டிருக்கிறது.

காசு இருக்கா, கொண்டாடு.
காரில் போக வக்கில்லாதவன், பிறந்திருக்கவே கூடாது.
மனித உடல் வேர்க்கக் கூடாது, வேர்ப்பது மிக மோசம்.
உடலுழைத்து உண்பவர்கள் ஈனப்பிறவிகள்.

இவைதான் இந்த பயங்கரவாதம் ஓதும் வேத வாக்கியங்கள். இந்த GDB பொருளாதார பயங்கரவாதத்தை ஒடுக்குவதுதான் எப்படி? சிந்திப்போம்.

என்றும் நட்புடன்
அ.நாராயணன் 

No comments:

Post a Comment