Wednesday, March 6, 2013

செப்டம்பர் 2012



பல்கலைக்கழகங்களின் கதவுகளைத் திறவுங்கள்!
இருள் நீங்கி வெளிச்ம் பரவட்டும்!

அன்புத்தோழர்களே!
அ.நாராயணன்
இம்மாத இதழ் வரவேற்பறை மூலம் உங்களுடன் எதைப் பற்றி பேசலாம் என்று யோசித்தேன். தகவல் கேட்டும் உரிமைச் ட்டம்நூறு நாள் கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டம் உட்பல சில நல்ல விஷயங்களை மக்களுக்கு அளித்திருந்தாலும், மற்ற பல நல்லத் திட்டங்களையும், சீர்திருத்தங்களையும் கொண்டு வரும் முயற்சியில் இருந்தாலும், அடுக்கடுக்கான ஊழல் புகார்களில் சிக்கித் தவிப்பதோடு, அரசே நடத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசேப்பற்றி எழுதலாமா?

பாராளுமன்றத்தை முடக்கிவிட்டு, இடைத் தேர்தல் மூலம் ஆட்சியைப் பிடிக்கும் அவரத்தில் இருக்கும் பாஜகவைப் பற்றியா?

தமிழகத்தில் பூதாகரமாக வெடித்துள்ள கிரானைட் ஊழல், மணல் கொள்ளை போன்ற விஷயங்களை அலலாமா? கிரிக்கெட் வீரர்களையும், ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் வெண்கலப்பதக்கம் பெற்ற வீரர்களையும் கொண்டாடும் நம் அரசு, மாற்றுத்திறனாளிகளுக்கான லண்டன் ஒலிம்பிக்ஸ் போட்டிக்குச் சென்றுள்ள 10 இந்திய மாற்றுத்திறனாளி போட்டியாளர்களுக்கு, குறைந்தபட் திகளையும், பயிற்சியாளர்களையும் கூட அளிக்காமல், நிர்க்கதியாக விட்ட பெரும் அவமானத்தைப் பற்றி விவாதிக்கலாமா?

தமிழக அரசு மருத்துவமனைகளில் நடக்கும் பெருச்சாளி, நாய்கள் வேட்டை பற்றி விவரிக்கலாமா? அல்லது எவ்வளவோ, கெட்ட செய்திகளுக்கு நடுவே, சில நல்ல நிகழ்வுகளும் நடக்கத் தானே செய்கின்றன, அவற்றைப்பற்றி பேசி நம்பிக்கையை வளர்க்கக் கூடாதா என்ன?

இப்படியெல்லாம் யோசனைகள் தோன்றினாலும், இவற்றைப் பேசுவதற்கு பல ஊடகங்கள் இருக்கின்றன, தவறான தகவல்களை அளித்து, மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக மே மாதம் பதவியேற்ற திருமதி.கல்யாணி மதிவாணன் உடனடியாக பதவி விலக வேண்டியதன் அவசியம் பற்றி மீண்டும் பதிவு செய்வதுதான், வருங்காலத் தமிழகத்திற்கு நாம் செய்யும் முக்கிய நன்மையாக இருக்க முடியும் என்று முடிவெடுத்தேன்.

ஒரு நாட்டின் உண்மையான முன்னேற்றத்திற்கும், அம்மக்களின் நல்வாழ்விற்கும், அந்நாட்டின் அறிஞர்கள், அறிவு ஜீவிகள், உயர்கல்வி நிறுவனங்கள் ஆகியோரின் பங்கினை குறைத்து மதிப்பிட முடியாது. பண்டைய நாலந்தா பல்கலைக்கழக அறிஞர்களாக இருக்கட்டும், உலகுக்கே வாழ் வியல் நெறிகளை எடுத்துக் கூறிய திருவள்ளுவராக இருக்கட்டும், கிரேக்க அறிஞர் சாக்ரடீஸ் ஆக இருக்கட்டும், உலகின் தலைசிறந்த இயற்பியல் மேதை ஜெர்மனியின் ஆல்பர்ட் எயின்ஸ்டீன் ஆகட்டும் இவர்கள்தான் மனித குலத்தை வழி நடத்தியவர்கள், பாதை வகுத்துக் கொடுத்தவர்கள்.

இன்றைக்கு மேற்கத்திய நாடுகள் எல்லாத் துறைகளிலும் வல்லமை பெற்று, அம்மக்களின் வாழ்க்கைத் தரத்தையும், சிந்தனைத் திறனையும் மேம்படுத்தியிருக்கிறார்கள் என்றால், அதற்கு அந்நாடுகளின் பல்கலைக் கழகங்கள் ஆற்றியுள்ள பணி இன்றியமையாதது. மேற்கத்திய பல்கலைக் கழகங்கள் நேர்மைக்கும், ய்வுக்கும், கடின உழைப்புக்கும், திறமைக்கும் கொடுக்கக்கூடிய முக்கியத்துவம் பிரமிக்கத் தக்கது.

தே மயத்தில், நமது நாட்டில், ஊழலும், மரமும் நம் மூகத்தின் எல்லாத் தளங்களிலும் ஊடுருவி, கரையான் புற்றுகளாக நமது விழு மியங்களை அரித்து வருகின்றன என்பது தெளிவாகத் தெரிகிறது. நமது இளைஞர்களுக்கு வழிகாட்டும் தலைவர்கள் இல்லை, பேராசிரியர்கள் இல்லை. இளைஞர்கள் கண்களில் நெறிசார்ந்த பெரியோர் தெரிவதில்லை.

ஒரு போட்டியான, பொறாமையான உலகத் துக்குள் நம் அடுத்த தலைமுறை தள்ளப்படு கிறது. இந்த தலைமுறைக்கு சிந்திக்கச் சொல்லிக் கொடுக்க மறுக்கிறோம். மூகப் பொறுப்புணர்வை யும், அறிவுப் பசியைத் தேடி அலையவும் கற்றுக் கொடுக்க நாம் தயாரில்லை. கல்லூரிகள், ஒன்று மாணவர்களை அடிமைகளாக நடத்துகின்றன. அல்லது, தனது பொருளாதார சுயமுன்னேற்றம் பற்றி மட்டுமே சிந்திக்கச் சொல்லிக் கொடுக்கின்றன. அல்லது, வழி நடத்துபவர்கள் இல்லாமல், அவை வன்முறைக் களங்களாக மாறிவருகின்றன. இதுதான் இந்தியா முழுவதும்.
இப்படியே போனால், இந்தியாவின் அங்கமான தமிழக மூகமும், ஒரு ராரிக்கும் கீழான மூகமாக மாறும் ஆபத்து காத்திருக்கிறது.

உயர்கல்வி நிறுவனங்களும், பல்கலைக் கழகங்களும் களையெடுக்கப்பட்டு, ஒட்டடைகள் தட்டப்பட்டு, எலிப்பொந்துகள் அடைக்கப்பட்டுஅவற்றை வெள்ளையடித்து புதுப்பிக்க வேண்டிய அவரம் உள்ளது. கடந்த பாடம் இதழிலேயே, துணைவேந்தர் பதவிகள் தமிழகத்தில் ஏலம் விடப்படுவது குறித்து பதிவு செய்து விட்டோம். தமிழக ஆளுநரிடம் கொடுக்கப்பட்ட மனு பற்றி விவாதித்துவிட்டோம். கடந்த சில ஆண்டுகளாக தமிழக பல் கலைக்கழகங்களில் நடைபெற்றுள்ள ஊழல்கள் பற்றி விசாரிக்க, விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது பற்றியும் எழுதிவிட்டோம்.

கல்யாணி மதிவாணன் அவர்களின் தகுதியின்மை பற்றி மே மாத இதழிலேயே வரவேற்பறையில் குறிப்பிட்ட ஒரே இதழ் பாடம் மட்டுமே.

ஏற்கனவே, தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் அநீதி இழைக்கப்பட்டு வரும் நிலையில், இனி மரத்திற்கு இடமில்லை. பல்கலைக்கழகங்களை அறிவொளி பெருகுவதற்கான சிறந்த நிறுவனங்களாக மாற்றி அமைப்பதற்கு தடையாக இருப்பவர்கள், முறைகேடாக பதவிக்கு வரும் துணைவேந்தர்களும், தகுதியற்ற ஆசிரியர்களும்தான்.

பல்கலைக்கழக மானியக்குழுவின் பரிந்துரைகள்படி கூட இல்லை, குறைந்தபட் தகுதியாக, ஒரு பேராசிரியராகக்கூட பணியாற்றாத, இணைப் பேராசிரியராக (அதாவது  Associate Professor) மட்டுமே எத்திராஜ் கல்லூரியில் பதவி வகித்துவிட்டு, பேராசிரியர் என்று தவறாகத் தகவல் அளித்து பதவிக்கு வந்த, இன்றைய மதுரை காமராஜ் பல்கலைக்கழக துணைவேந்தர் திருமதி.கல்யாணி மதிவாணன் உடனடியாக, பதவி விலக வேண்டும்.

தமிழக ஆளுநர், அவரது பதவி விலகல் கடிதத்தைக் கேட்டுப் பெற்று, புதிதாக ஒரு தேடுதல் குழுவை நியமிக்க வேண்டும். பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்கள் தொடர்பான எல்லா விவரங்களையும், வலைத்தளங்களில் வெளியிட்டு பொதுப்பார்வைக்கு வைக்க தமிழக ஆளுநர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

166 தகுதியானவர்கள் அளித்த விண்ணப்பங் களையும் தாண்டி, கடைசியில் தேர்வு செய்யப்பட்ட மற்ற இரு பேராசிரியர்களையும் ஒதுக்கி விட்டு, திருமதி.கல்யாணி மதிவாணன் அவர்களை தேர்வு செய்வேண்டிய கட்டாயம், இதற்காக அமைக்கப்பட்ட தேடுதல் குழுவிற்கும்ஆளுநருக்கும் ஏற்பட்டதற்கான காரணம் அரசியல் தலையீடு மட்டுமே.

தமிழக முதல்வர் அவர்களே! ஆளுநர் அவர்களே! பல்கலைக் கழகத் கதவுகளையும், ஜன்னல்களையும் அகலத் திறவுங்கள். காற்றும் வெளிச்மும் வரட்டும், இருளும் இருளை விரும்புபவர்களும் வெளியேறட்டும்.

அப்பொழுதுதான், வெளிச்த்தை விரும்பும் எஞ்சியிருக்கும் நேர்மையான பேராசிரியர்களும் உண்மையான கல்வியாளர்களும் ஆர்வத்துடன் அடுத்த தலைமுறையை செதுக்கத் துணிவார்கள். திறமைகள் வெளிப்படும். நீங்கள் ஆசேப்படும் விஷன் - 2023’ எனும் தொலை  நோக்குக் குறிக்கோள் தமிழகத்தில் நனவாகும்.    
இருள் விலகும் எனும்


நம்பிக்கையுடன்

அ.நாராயணன்




No comments:

Post a Comment